17 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி!
IND V WI T20 Series 17 Years Streak Was Broken By WI Indies Cricket Team Idamporul
17 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு எதிராக சீரிஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது.
இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்கு பின்னர் 17 வருடத்திற்கு பிறகு தற்போது இந்தியாவிற்கு எதிராக தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.
தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் ஹர்திக் அவர்களின் மோசமான தலைமை என்றே சொல்லலாம். இனியாவது பிசிசிஐ ஓவ்வொரு சீரிஸ்க்கும் ஒவ்வொரு கேப்டன், ஒவ்வொரு அணி என்பதை கை விட்டு விட்டு நிலையான அணியை எல்லா தொடர்களிலும் விளையாட வைக்க வேண்டும்.
“ இல்லையேல் அடுத்து வரும் அயர்லாந்து தொடரிலும் இந்திய அணி மண்ணை கவ்வும், அது இந்திய அணியின் மனநிலையை உலககோப்பைக்கு முன் வெகுவாக பாதிக்கும் “