T20 Series | INDW v NZW | ’18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது நியூசிலாந்து’
IND V NZ Only T20 Newzealand Beat India By 18 Runs
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ஓரே ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இருக்கிறது நியூசிலாந்து.
முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியால் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்து இருக்கிறது இந்தியா.
“ அடுத்ததாக 5 ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து எதிராக ஆட இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி வருகின்ற பிப்ரவரி 12 அன்று தொடங்க இருக்கிறது “