ICC T20 WC 2021 | தென் ஆப்பிரிக்காவை வென்றது ஆஸ்திரேலியா அணி!

T20 WC 2021 13th Match South Africa Lost Against Australia

T20 WC 2021 13th Match South Africa Lost Against Australia

டி20 உலக கோப்பையின் பதிமூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்று இருக்கிறது ஆஸ்திரேலியா.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க ஆணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஸ்டார்க், ஹேசல் வுட், ஆடம் சம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய ஆஸ்திரேலியா 19.4 ஓவர்களில் இலக்கை துரத்திப் பிடித்தது.

தொடர்ந்து விக்கெட்டுக்கள் சரிந்த போது ஸ்மித் நிலைத்து நின்று ஆடி 35(34) ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ஆன்ட்ரியு நார்ட்ஜே நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

” குறைந்த ஸ்கோராக இருந்த போதும் இந்த போட்டி ஒரு திரில்லராகவே அமைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா சார்பில் பினிஷிங் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மேட்சை பினிஷ் செய்து கொடுத்தார் ”

About Author