தொடர் மழையால் சுவாரஸ்யம் அற்று போகும் டி20 உலக கோப்பை!
ICC T20 WC 2022 Australia Weather Update
ஆஸ்திரேலியாவில் நிலவும் வானிலையால் டி20 உலககோப்பை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு டி20 உலககோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு நிலவும் வானிலை போட்டிகளை மிகவும் பாதித்து இருக்கிறது. அவ்வப்போது கேன்சல் செய்யப்படும் போட்டிகளால் டி20 உலக கோப்பையே சுவாரஸ்யமற்று இருப்பதாக ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
“ தொடர்ந்து இது போல மழை பொழிந்து வந்தால் சில அணிகளுக்கு அது சாதகமாகவும் சில அணிகளுக்கு அது பாதகமாகவும் முடிவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது “