டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் வலிமை எப்படி இருக்கிறது?
டி20 உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்திய அணியின் தற்போதைய வலிமை எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய வீரர்கள்
வீரர்கள் விவரம்: ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்
சரி, அணி எப்படி இருக்கிறது?
ரோஹிட், பும்ரா, விராட், சூர்ய குமார், ரிஷப் பந்த் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் பெயர்கள் ஸ்குவாடில் இருந்தாலும் கூட, இவர்கள் யாருமே பெரிதாக ஐபிஎல் -லில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதும் உண்மை. விராட் சிறப்பாக ஆடினாலும் கூட பெரிய ஸ்ட்ரைக் ரேட் ஏதும் இல்லை. ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா எல்லாம் ஐபிஎல் ஆடியதாகவே நியாபகம் இல்லை. அந்த அளவிற்கு இருந்தது அவர்களின் ஆட்டம்.
துபே, பும்ரா, குல்தீப் யாதவ் போன்றோர்கள் சரியான தேர்வாக தெரிந்தாலும் கூட, ஜெய்ஸ்வால் இடத்தில், ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. பும்ராவிற்கு துணை பவுலர்கள் யார் என்பது இன்னமுமே கேள்விக்குறியாக தான் இருக்கிறது. ஓரளவிற்கு பேட்டிங் ஸ்ட்ராங்காக இருந்தாலும் கூட, பவுலிங் யூனிட் என்பது சற்றே பெரிய ஓட்டையாக தான் தெரிகிறது.
” ஐபிஎல்-லில் நட்சத்திர பவுலர்களாக ஜொலித்த நடராஜன், புவனேஸ்வர் குமார் போன்றோருக்கு ஏன் ஸ்குவாடில் இடமில்லை என்றதொரு கேள்வியை பலரும் சமூக வலைதளங்களில் முன் வைக்கின்றனர். என்ன தான் பேட்டிங் வரிசை வலிமையாக தெரிந்தாலும் கூட, ஒரு சர்வதேச பார்மட்டிற்கான சிறப்பான பவுலிங் யூனிட்டை பிசிசிஐ தெரிவு செய்யவில்லை என்பது உண்மை “