டி20 உலககோப்பை 2024-ற்கான இந்திய அணி ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை ரிங்கு சிங் கொண்டு நிரப்பிட பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக இன்னமும் உடற் தகுதி பெறவில்லை, ஒரு வேளை உலககோப்பைக்கு முன் அவர் நல்ல உடல் தகுதி பெற்றாலும் கூட அவர் பவுலிங் போடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் இளம் வீரர் ரிங்கு சிங்கை டி20 உலககோப்பை ஸ்குவாடில் இணைத்திட பிசிசிஐ திட்டமிட்டு வருகிறதாம்.
“ ரோஹிட், விராட் கோஹ்லி உள்ளிட்ட சீனியர் வீரர்களும் டி20 உலககோப்பையில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்து இருப்பதால், ஹர்திக் பாண்டியாவின் இடம் இன்னமும் கேள்விக்குறியாக தான் இருக்கிறது “