T20 WC Squad | Indian Cricket Team | எல்லாம் ஒகே தான், ஆனா டெத் பவுலிங்குக்கு என்ன பண்ணுவீங்க?
ஒரு பேட்டிங் யூனிட் எப்படி ரன்களை கடைசி சில ஓவர்களில் அணியின் ரன்களை மிகைப்படுத்த வேண்டுமோ, அது போல ஒரு அணியின் பவுலிங் யூனிட் கடைசி சில ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டுவது அவசியமாகிறது. அதற்கு தான் ஒரு அணியில் டெத் பவுலிங் என்பது மிக மிக அவசியமாகிறது.
இந்திய அணியின் தற்போதைய ஸ்குவாடை எடுத்துக் கொண்டால், பும்ராவிற்கு அடுத்து நமக்கு இருக்கும் ஒரே டெத் பவுலிங் ஆப்சன் என்பது அர்ஷதீப் சிங், மட்டும் தான், அனுபவம் இல்லாத இவரை வைத்து டெத் பவுலிங் செய்வது என்பது ஆடு அதுவாகவே தலையை கொண்டு கொடுப்பதற்கு சமம். பிசிசிஐ கொஞ்சமே அணியை தேர்வு செய்வதில் அவசரப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
அக்ஸர் படேல் இடத்தில் சீனியர் மோஸ்ட் பவுலர் புவனேஸ்வர் குமாரை அணியில் இணைத்து இருக்கலாம், அர்ஷதீப் சிங் இடத்தில், நடராஜனை இணைத்து இருக்கலாம். ஒரு விக்கெட் டேக்கிங் ஆப்சனும், பும்ராவிற்கு அடுத்து ஒரு எக்ஸ்ட்ரா டெத் பவுலிங் ஆப்சனாக நடராஜனும் இருந்து இருப்பார். பும்ராவை பவர் பிளேவில் முழுதாக பயன்படுத்தும் சமயத்தில், நட்டுவிடன் இணைத்து புவனேஸ்வர் குமார் அவர்களையும் சில சமயங்களில் டெத் பவுலிங் ஆப்சனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜெய்ஸ்வால் பார்ம் எல்லாம் எப்போதோ படுத்து விட்டது, அவருக்கு பதில் ருதுராஜை கூட பிசிசிஐ இணைத்து இருக்கலாம். ஒட்டு மொத்தமாகவே பிசிசிஐ அணி தேர்வில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது இந்த விபரீத முடிவின் விளைவு என்பது நாளை ஒரு இக்கட்டான போட்டியில் அணி சிக்கி தவிக்கும் போது தான் தெரியும்.
“ முழுக்க முழுக்க டெத் பவுலிங்கிற்கு பும்ராவை மட்டும் நம்பி அணி களம் இறங்குகிறது என்னும் போது, நிச்சயம் இந்த உலக கோப்பையில் இந்திய அணி இக்கட்டான சூழலில் போய் நிற்கும் என்பதில் ஐயமில்லை “