தென் ஆப்பிரிக்காவிற்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்று ஆறாவது முறையாக டி20 உலககோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறி கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் 6 ஆவது முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலிய மகளிர் அணி.
“ மேலும் இது போக டபுள் ஹாட்ரிக் உலககோப்பை என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலிய மகளிர் அணி “