டி20 உலக கோப்பை | வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா!

India Win Against Australia Warm Up Match T20 World Cup

India Win Against Australia Warm Up Match T20 World Cup

டி20 உலக கோப்பையின் வார்ம் அப் மேட்சில் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வென்று தனது இரண்டாவது வெற்றியை அடைந்திருக்கிறது இந்திய அணி.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்மித் 57(48) ரன்கள் குவித்தார். அதற்கு பின் அதிரடியாக ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே பறி கொடுத்து 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது.

இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா மூன்று சிக்சர்கள் மற்றும் ஐந்து போர்களுடன், 41 பந்துகளில் 60 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இதுவரை விளையாடிய இரண்டு வார்ம் அப் போட்டிகளிலும் வெற்றியை ருசித்து கோப்பையை நோக்கி விளையாட நகர்ந்து கொண்டு இருக்கிறது இந்திய அணி.

“ கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வார்ம் அப் மேட்களில் அதிரடியாக தோற்கடித்து, ’கோப்பை மேல கைய வைடா பாக்கலாம்’ என்ற தோரணையில் நிற்கிறது இந்திய அணி “

About Author