போட்டி போட்டு தோற்கும் ஐபிஎல்-லின் ஆண்ட பரம்பரை அணிகள்!
TATA IPL 2022 Continuous Four Loss For MI And CSK
ஐபிஎல் 2022 இது வரை 18 போட்டிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு போட்டியில் கூட மும்பையும் சென்னையும் வெல்லவில்லை.
இதுவரை 14 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்து இருக்கிறது அதில் 9 ஐபிஎல் கோப்பைகளை சென்னையும் (4), மும்பையும் (5) இணைந்து வென்று இருக்கிறது. ஆனால் இந்த 15 ஆவது சீசனில் இதுவரை இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
“ ஆண்ட பரம்பரை அணிகளுக்கு இந்த ஐபிஎல் சீசன் சோதனை காலம் தான் போல. இனி வரும் அத்தனை போட்டிகளில் ஜெயித்தாலும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பது இரு அணிகளுக்கும் சந்தேகமே “