TATA IPL 2022 | DC vs RR | ‘அது உண்மையில் நோ பாலா இல்லையா?’
டாடா ஐபிஎல் 2022-யில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான நேற்றைய போட்டி திரில்லராக போய் முடிந்த நிலையில் கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சை அரங்கத்தை கொஞ்சம் அமளிப்படுத்தியது.
கடைசி ஓவர், டெல்லி அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. மெக்காய் பந்து வீச பவல் களத்தில் நிற்க 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள், அதில் மூன்றாவது பந்து சற்றே இடுப்பு மேலே வீசப்பட்ட நிலையில் டெல்லி அணியில் அனைவரும் நோ பால் நோ பால் என்று சிட்டிங் ஏரியாவில் இருந்து குரல் கொடுக்கவே கொஞ்ச நேரம் களம் சூடானது. கடைசியில் நோபாலும் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் அம்பையர்கள் ரிவ்யூ செய்து இருக்கலாம் என்பதே ரசிகர்களின் குமுறல்.
போர் சிக்ஸர்களுக்கு சந்தேகம் இருந்தால் நான்கைந்து முறை ரிப்ளை செய்து பார்க்க துடிக்கும் அம்பையர்கள் இதற்கும், இது போன்ற சர்ச்சையான முடிவுகளுக்கும் செய்து பார்க்கலாம். ஏனென்றால் தற்போதெல்லாம் ஒரு பால் கூட வெற்றி தோல்வியை தீர்மானிப்பதால் ஒரு தெளிவான தீர்வு இல்லையென்றால் மூன்றாவது நடுவரின் ஆலோசனையை பெற்று முடிவெடுப்பது விளையாட்டில் தர்மத்தை நிலைநாட்டும்.
“ இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் நேற்று ரிஷப் பண்ட் மட்டும் இந்த மொமண்டத்தை மாற்றாமல் இருந்திருந்தால், பவல் 6 பால்களில் 6 சிக்ஸர்கள் கூட அடித்து இருப்பார். இடையில் இந்த நோ பால் சர்ச்சை தலையிடவே அங்கே கொஞ்சம் பவுலருக்கும் ரிலாக்ஸ் கிடைத்தாயிற்று. பேட்ஸ்மேனுக்கு அந்த மொமண்டமும் அத்தோடு போயிற்று “