TATA IPL 2022 | Eliminator | ‘ராஜ் பட்டிதார் அதிரடியில் குவாலிபையர் 2-க்கு அடி எடுத்து வைத்து இருக்கிரது ஆர்சிபி’
டாடா ஐபிஎல் 2022-யின் எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருக்கிறது பெங்களுரு அணி.
ஒரு கட்டத்தில் கோஹ்லி, டு பிளஸ்சிஸ், மேக்ஸ்வெல் என்று நட்சத்திர பிளேயர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, ராஜ் பட்டிதார் 112(54) ஒரு பக்கம் லக்னோ பவுலர்களை போட்டு பொளக்க, 207 ரன்கள் இலக்கு வைத்தது ஆர்சிபி. அதற்கு பின் ஆடிய லக்னோ பேட்ஸ்மேன் வரிசைகளை சரியாக யூஸ் பண்ணாததன் விளைவு 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
” கே எல் ராகுல் ஒரு பேட்ஸ்மேனாக சீசன் முழுக்க ஜொலித்தாலும் ஒரு கேப்டனாக அவ்வப்போது தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார். பார்க்கலாம் மெருகேறுவார் “