TATA IPL 2022 | ‘நாங்க தான் கப் அடிக்க போறோம், ஆரவாரம் செய்யும் ஆர்சிபியன்ஸ்’
டாடா ஐபிஎல் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்போதுமே லீக் போட்டிகளில் அந்த அளவுக்கு பெரிதாக அழுத்தம் இருக்காது. ஆனால் இறுதிப்போட்டி என்னும் போது ஒவ்வொரு ப்ளேயர்களின் மீதும் கடும் அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தத்தை சீனியர் பிளேயர்கள் அதிகமாக இருக்கும் ஆர்சிபி அணியால் எளிதில் எதிர்கொள்ள முடியும். இதனால் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
“ அப்புறம் என்ன கப்புல ஆர்சிபி பேர எழுதிக்கொடுங்க என்று ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரத்துடன் திரிகின்றனர். எதுவாக இருந்தாலும் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்து விடுவோம் “