டாடா ஐபிஎல் 2022-யின் 15 ஆவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ்.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்தது. பிரித்திவ் ஷா 61(34) அதிரடியாக ஆடிய போதும் கூட, அடுத்தடுத்து வந்தவர்கள் மந்தமாக ஆடியதன் விளைவு டெல்லி 150 யை கூட தொடவில்லை. அதற்கு பின் ஆடிய லக்னோ 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.
“ 9 போர்கள் மற்றும் 2 சிக்ஸ்சர்களுடன் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த குயிண்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “