TATA IPL 2022 | Match 21 | ‘குஜராத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்’
டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஒன்றாம் போட்டியில் குஜராத்தை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ஹைதராபாத்.
முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாண்டியா 50(42) ரன்கள் குவித்தார். அதற்கு பின் ஆடிய சன் ரைசர்ஸ் அணி நிதானமாக விளையாடி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் இந்த ஐபிஎல்-லில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.
“ 46 பந்துகளில் 57 ரன்கள் விளாசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “