TATA IPL 2022 | Match 24 | ‘ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்’
TATA IPL 2022 Match 24 GT vs RR Gujarat Won By 37 Runs
டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காம் போட்டியில், ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது குஜராத்.
முதலில் ஆடிய குஜராத் அணி, கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் 87(52) அதிரடியால் 192 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லர் 54(24) தவிர யாரும் பெரிதாய் பேட்டிங்கில் ஜொலிக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
“ 8 போர்கள் 4 சிக்ஸ்சர்களுடன் 87(52) ரன்கள் குவித்த குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “