TATA IPL 2022 | Match 25 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்’
டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ஹைதராபாத்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி, துவக்கத்தில் சொதப்பினாலும், ராகுல் திரிபாதியும் 71(37), மார்க்ரமும் 68(36) அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
“ 6 சிக்ஸ்கள் மற்றும் 4 போர்களுடன் கொல்கத்தா அணிக்கு வானவேடிக்கை காட்டிய ராகுல் திரிபாதி 71(37) ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “