TATA IPL 2022 | MATCH 40 | ‘5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்றது குஜராத்’
டாடா ஐபிஎல் 2022-யின் 40 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது குஜராத்.
முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. ஒரு பக்கம் பவுலிங்கில் உம்ரான் மாலிக் அதிரடி காட்டினாலும், இறுதியில் ராஷித் மற்றும் திவாட்டியா குஜராத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
“ நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய உம்ரான் மாலிக் ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த ஐபிஎல்-லில் முதன் முதலில் தோற்ற அணியில் இருக்கும் ஒருவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது “