TATA IPL 2022 | Match 47 | ‘ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா’
டாடா ஐபிஎல் 2022-யின் 47 ஆவது போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 54(49) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து ராணா 48(37) மற்றும் ரின்கு சிங் 42(23) உதவியுடன் எளிதாக இலக்கை துரத்தி பிடித்தது.
“ 6 போர்கள் மற்றும் 1 சிக்ஸ்சுடன் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த ரின்கு சிங் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “