TATA IPL 2022 | Match 50 | ’ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’
டாடா ஐபிஎல் 2022-யின் 50 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.
முதலில் ஆடிய டெல்லி அணி வார்னர் 92(58) மற்றும் பவல்லின் 67(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணியின் பூரான் 62(34) தவிர யாரும் பெரிதும் ஜொலிக்காததால் 186 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
“ 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்த டெல்லி அணியின் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார் “