டாடா ஐபிஎல் 2022-யின் 53 ஆவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி.
இன்று நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ முதல் நான்கு இடத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் லக்னோ அணி, இன்றும் வெற்றி பெற்று விட்டால் கூடுதல் புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் “