டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சன்ரைசர்ஸ் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி இருக்கிறது.
“ பேட்டிங்கில் 49(28), பவுலிங்கில் 4-22-3 என்று கலக்கிய ரஸ்சல் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “