TATA IPL 2022 | Match 64 | ’ பெங்களுரு அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை கைப்பற்றியது டெல்லி’
டாடா ஐபிஎல் 2022-யின் 64 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது டெல்லி.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியினர் தொடர்ச்சியாக சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கின்றனர்.
“ இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி நல்ல நெட் ரன்ரேட்டுடன் பெங்களுரு அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை அடைந்து இருக்கிறது “