TATA IPL 2022 | Match 65 | ’3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ஹைதராபாத்’
டாடா ஐபிஎல் 2022-யின் 65 ஆவது போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி, திரிபாதி 76(44) மற்றும் பிரியம் கார்க் 42(26) அதிரடியால் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை அணியின் துவக்கம் சரியாக இருந்தும், டிம் டேவிட் 46(18) அதிரடி காட்டிய போதும் கூட 3 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது 10 ஆவது தோல்வியை பதிவு செய்து இருக்கிறது.
“ பொல்லார்டுக்கு ஒரு ரீப்ளேஸ்மென்ட் ஆக பினிஷர் ரோலில் டிம் டேவிட் மும்பை அணிக்கு கிடைத்து இருக்கிறார். அது மட்டுமே இந்த போட்டியில் மும்பைக்கு கிடைத்த ஒரு உத்வேகம். அதை அடுத்த சீசனில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம் “