டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா.
முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தாலும் கூட, திடீரென வந்த பேட் கம்மின்ஸ் சரவெடியாக வெடித்து 56(15) 16 ஓவர்களின் அணியை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார்.
“ 15 பந்துகளில், 6 சிக்ஸ்சர்கள், 4 போர்கள் அடித்து 56 ரன்கள் எடுத்த பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “