TATA IPL 2022 | PBKS vs MI | ‘தொடர்ச்சியாக ஐந்து தோல்விகள், மும்பைக்கு என்ன தான் ஆச்சு?’

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து மூன்றாவது போட்டியில் மும்பையை 12 ரன்கல் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது மும்பை அணிக்கு தொடர்ச்சியான ஐந்தாவது தோல்வி ஆகும்.

“ பொல்லார்டு, ரோஹிட் இருவரும் பேட்டிங்கில் பெரிதாய் ஜொலிக்காததாலும், மோசமான பவுலிங் கலவைகளாலும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி “

About Author