டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில் கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் மட்டுமே விளையாடி பத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயித்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர்கள் வரிந்துகட்டி சொதப்பினாலும் அடுத்தடுத்து வந்தவர்கள் சுதாரித்து ஆடி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்தனர்.
“ நான்கு ஓவர்கள் வீசி, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய சுழல் மன்னன் ஹசரங்கா ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “