நாளை நடக்கும் டாடா ஐபிஎல்லின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
டாடா ஐபிஎல் 2023 நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், நடக்க இருக்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.
“ கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியுடன், நான்கு முறை சாம்பியன் ஆன அணியான சென்னை மோத இருப்பதால் நிச்சயம் களத்தில் அனல் பறக்கும் “