IPL 2024 | Delhi Capitals | மேல ஏறி வர்றோம் ஒதுங்கி நில்லு, கீழ இறங்க சொன்ன அட எகிறும் பல்லு!

TATA IPL 2024 Delhi Capitals Climped To 6th In Point Table Idamporul

TATA IPL 2024 Delhi Capitals Climped To 6th In Point Table Idamporul

தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வந்த டெல்லி அணி ஒரு வழியாக தனது வெற்றி பார்முலாவை பிடித்து விட்டது என்று சொல்லி விடலாம். கடைசி இரண்டு போட்டிகளிலும், சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி ஒரு போட்டியிலும் என, 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 6 ஆவது இடத்தில் இருக்கிறது.

பேட்டிங் ஆர்டர், பவுலிங் என எல்லாமே டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி & கோ தன் தவறுகளை சரி செய்து இருக்கிறது. களத்திற்குள் சரியான அணியை தேர்வு செய்து தனது வெற்றி பார்முலாவை ஒரு வழியாக இறுகப்பற்றி இருக்கிறது.

அதிரடி துவக்கத்திற்கு பிரித்திவ் ஷா மற்றும் ஜேக் பிரேசர், மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஷாய் ஹோப், ஸ்டப்ஸ், அக்சர் படேல், விக்கெட் டேக்கிங்கிற்கு குல்தீப் யாதவ், ரன்னை கண்டெய்ன் பண்ண அக்ஸர் படேல், டெத் பவுலிங்கிற்கு முகேஷ், ஸ்விங்கிற்கு கலீல் அஹமது என டெல்லி தற்போது சரியான கலவையை தேர்வு செய்து அணியை வலுப்படுத்தி இருக்கிறது.

“ இந்த முறை முதல் நான்கு இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா அணிகளுமே களத்தில் தங்களது வெற்றியை விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகின்றனர். மொத்தத்தில் இந்த ஐபிஎல் ஒரு அதகள ஐபிஎல் “

About Author