பவர்புல் அணியாக தெரிந்தாலும் கூட சென்னை இந்த ஐபிஎல்-லில் பெரிய சக்ஸஸ்புல் அணியாக தெரியவில்லை ஏன்?
ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை அணி இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட பெரிய சக்ஸஸ்புல் அணியாக தென்படவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட சென்னை அணிக்கு பெரிய பலவீனமாக இருப்பது பவர்பிளேவை மிகைப்படுத்த தவறுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பழைய பன்னீர் செல்வமான சென்னை அணியின், முன்னாள் துவக்க வீரர்களை எடுத்துக் கொண்டால் மைக்கேல் ஹுஸ்சே – முரளி விஜய், மெக்கல்லம் – ஸ்மித், ருதுராஜ் – டு பிளஸ்சிஸ், ருதுராஜ் – கான்வே என்று ஒவ்வொரு சீசனும் ஒரு பெட்டர் ஓபனிங் இருக்கும். இந்த சீசனில் சிஎஸ்கே மிஸ் செய்வது அந்த ஒரு காம்பினேசன் கொண்ட ஓபனர்களை தான், ரச்சீன் ரவீந்திரா – ருதுராஜ் காம்பினேசனும் சரி, ரஹானே – ருதுராஜ் காம்பினேசனும் சரி இந்த சீசன் முழுக்க செட் ஆகவில்லை.
சிஎஸ்கே அணியின் பெரும்பாலான பின்னடைவுகளுக்கு பெரிதும் காரணமாய் இருந்தது இந்த தற்போதைய ஓபனர்களின் சொதப்பல்கள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு சிஎஸ்கேவின் ஓபனர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் உண்மை. ஒரு டு பிளஸ்சிஸ் போல, ஒரு கான்வே போல, ஒரு ஸ்மித் போல, ஒரு பிரெண்டன் மெக்கல்லம் போல ஒரு துவக்க ஆட்டக்காரரை சிஎஸ்கே அணி மிகவும் மிஸ் செய்கிறது.
’’ வரும் போட்டிகளில் ஆவது சென்னை அணியின் நிர்வாகம் அதை நிவர்த்தி செய்யுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்த்து ஆக வேண்டும் ’