IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’
ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது.
முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், கே.எம்.ஆசிப், துஷர் தேஷ்பாண்டே என்று ஆறு வீரர்களை மட்டும் எடுத்து அமைதியாக இருந்த சி.எஸ்.கே இரண்டாம் நாளில் மிகவும் துடிப்பாக பிளேயர்களை அள்ளி போட ஆரம்பித்தது. ஓரளவுக்கு வலுவான அணியை அமைத்து இருந்தாலும் டியூ பிளஸ்சிஸ்சை இழந்திருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் சிஎஸ்கேவின் செல்ல பிள்ளையான குட்டி தல சுரேஷ் ரெய்னாவை ஆக்சனில் கேட்க கூட இல்லாமல் அப்படியே விட்டு இருப்பது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஓரு மேட்ச்சாவது சிஎஸ்கே அணிக்காக விளையாட வைத்து வழி அனுப்பி வைத்து இருக்கலாம் என்பது சென்னை ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பு.
Team CSK:
Retained Players :
- Ravindra Jadeja – Rs 16 crore
- MS Dhoni – Rs 12 crore
- Moeen Ali – Rs 8 crore
- Ruturaj Gaikwad – Rs 6 crore
Bought Players On Day 1 :
- Dwayne Bravo – Rs 4.4 crore
- Robin Uthappa – Rs 2 crore
- Ambati Rayudu – Rs 6.75 crore
- Deepak Chahar – Rs 14 crore
- KM Asif – Rs 20 lakh
- Tushar Deshpande – Rs 20 lakh
Bought Players On Day 2 :
- Shivam Dube – Rs 4 crore
- Maheesh Theekshana – Rs 70 lakh
- Rajvardhan Hangargekar – Rs 1.5 crore
- Simarjeet Singh – Rs 20 lakh
- Devon Conway – Rs 1 crore
- Dwaine Pretorius – R 50 lakh
- Mitchell Santner – Rs 1.9 crore
- Adam Milne – Rs 1.9 crore
- Subhranshu Senapati – Rs 20 lakh
- Mukesh Choudhary – Rs 20 lakh
- Prashant Solanki – Rs 1.2 crore
- C Hari Nishaanth – Rs 20 lakh
- N Jagadeesan – Rs 20 lakh
- Chris Jordan – Rs 3.6 crore
- K Bhagath Varma – Rs 20 lakh
” ஒரு பக்கம் டியூ பிளஸ்சிஸ்சை ஆக்சனில் இழந்த சோகம், இன்னொரு பக்கம் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் ஆக்சனில் கேட்க கூட முன் வராத பெரும் சோகம் என்று சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் துயர அலை சுனாமியாக எழும்பி வருகிறது “