டெஸ்ட் பார்மட்டில் இந்தியா, விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் – மார்கன்
டெஸ்ட் பார்மட்டில் இந்திய அணி, விராட் கோஹ்லியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்கன் கூறி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தோல்விற்கு பின்னர் தற்போதைய டெஸ்ட் கேப்டன் ரோஹிட் ஷர்மா மீது பல்வேறு விதங்களில் சாடல்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் டெஸ்ட் பார்மட்டில் இந்தியா விராட்டின் இடத்தை நிரப்புவது கடினம் என்ற கூறி இருக்கிறார்.
விராட் கோஹ்லி டெஸ்ட் பார்மட்களில் செய்த சாதனைகளை எல்லாம் இனி வரும் இந்திய கேப்டன்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அவர் கேப்டனாக களத்தில் நிற்கும் போது எப்போதும் அனைத்து வீரரிடமும் ஒரு அக்ரஷன் இருக்கும். அனைத்து வீரரிடம் ஒரு உத்வேகம் இருக்கும். அது ரோஹிட் இருக்கும் போது இல்லை என இயான் மார்கன் கூறி இருக்கிறார்.
“ உலகின் நம்பர் 1 பவுலரை இருக்கையில் அமர வைத்து விட்டு உலக டெஸ்ட் சாம்பியன்சிப் விளையாடியதே ரோஹிட் செய்த மிகப்பெரிய தவறு. அவர் கேப்டனாக இன்னும் நிறையவே கற்க வேண்டியதுள்ளது என்றும் மார்கன் கூறி இருக்கிறார் “