TEST Series | IND v SL | ‘புஜாரா மற்றும் ரஹானே ஸ்குவாடில் இருந்து நீக்கம்’
Test Series IND v SL Pujara And Rahane Dropped From Squad
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான அஜிங்கியா ரஹானே மற்றும் புஜாரா அணியில் சேர்க்கபடாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), KS பரத், ஆர் ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்).
“ ரோஹிட் சர்மா முழு நேர கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார், ஜஸ்ப்ரீட் பும்ரா துணை கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். அணியின் சுவராக கருதப்படும் புஜாரா அணியில் இல்லாதது அணிக்கு நிச்சயம் இழப்பாக தான் இருக்கும் “