The Ashes | First Test | ’இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்றது ஆஸ்திரேலியா’
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை அதிரடியாக வென்று தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ஆஸ்திரேலியா.
ஆஷஸ் தொடர் என்றாலே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மிகப்பெரிய யுத்தமாக கருதப்படும். முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் ஹப்பாவில் தொடங்கியது. இந்த நிலையில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 147 ரன்களுக்குள் ஆட்டமிழக்க, அதன் பின் ஆடிய ஆஸ்திரேலியா 425 ரன்களைக் குவித்தது. அதற்கு பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியால் ஆஸ்திரேலிய அணிக்கு 20 ரன்களே இலக்கு வைக்க முடிந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து எளிதாக இலக்கை அடைந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிரடியாக விளையாடி 148 பால்களுக்கு 152 ரன்கள் குவித்த ட்ராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது நிலை குலைய வைக்கும் வேகத்தில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.
“ ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்றோர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு மிகவும் சுமாராகவே தென்படுகிறது. எப்போதும் விறுவிறுப்பாக நகரும் ஆஷஸ் போட்டி தற்போது ஒரு கைபக்கம் ஓங்கி நிற்பதாகவே தென்படுகிறது “