பெரும் நட்சத்திர வீரர்கள் இல்லாத இலங்கை அணியுடன் கூட போராடி வெல்வது தான் இந்திய அணியா?
Confidence In Indian Team Is Low Idamporul
நட்சத்திர வீரர்கள் பெரிதாய் இல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்கிறது என்பதால் இந்திய அணி மீதான உலககோப்பை நம்பிக்கை கலைந்து வருகிறது.
பெரும் அனுபவங்களும், நட்சத்திர வீரர்களும் அல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்க வேண்டிய நிலைமை இருந்தால், நாளைய ஒரு நாள் உலககோப்பை தொடரை இந்த இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“ ஒவ்வொரு தொடருக்கும் மாற்றப்படும் கேப்டன்சிப், ஒவ்வொரு தொடருக்கும் ஏன் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு அணி என்று இந்த ஒற்றுமை இல்லாத கட்டமைப்பு இல்லாத அணி உலககோப்பையை இந்த வருடம் வெல்லும் என்பது சந்தேகமே “