அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மிகவும் சிரமப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி!
அத்தியாவசிய வசதிகள் கூட இல்லாமல் மேற்கிந்திய தீவுகள் மிகவும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு காலத்தில் அனைத்து அணிகளையும் நடுநடுங்க வைத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது உலககோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத நிலையில் இருக்கிறது. காரணம் என்ன என்று ஆராய்கையில், போர்டு அணிக்காக அத்தியாவசிய வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லையாம். வீரர்களுக்கான சம்பளமும் சரியாக அவர்களை போய் சேர்வதில்லையாம்.
தரமான கிரிக்கெட் வீரர்களையும், சீனியர் வீரர்களையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போர்டு சுத்தமாக மதிப்பதில்லையாம். நெட் வசதி கூட இல்லாமல், புல் தரையிலும் இல்லாமல், சாதாரண மண் தரையில் பயிற்சி கொள்ளும் அவலம். ஒரு காலத்தில் யாராலும் அசைக்க முடியாமல் இருந்த இந்த அணிக்கு நிகழ்ந்த முழு அவலத்திற்கும் போர்டே காரணம் என்கின்றனர் சீனியர் வீரர்கள்.
“ ஒரு அணியின் போர்டே வீரர்களை மதிக்கவில்லையெனில், அவர்கள் பயிற்சி செய்ய எந்த ஒரு நல்ல களமும் இல்லையெனில், அவர்களது விளையாட்டில் அவர்களால் எப்படி தீவிரம் காட்டி விளையாட முடியும் என்பது ஒவ்வொரு ரசிகனின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது “