சிஎஸ்கேவில் இணைக்கப்பட்ட பவர் ஹிட்டருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்!
U 19 Cricket Player Rajvardhan Hangarkekar Accused Of Age Fudging
19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வயதில் முறைகேடு செய்ததாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
சமீபத்தில் சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட பவர்ஹிட்டர் ராஜ்வர்தன், தற்போது நடந்த 19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக, வயதில் முறைகேடு செய்து இருப்பதாக மஹாராஸ்டிரா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-கும் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
“ இந்த குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர் ஐபிஎல் மற்றும் உலகளாவிய கிரிக்கெட்டிலி இருந்து தடை செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது “