U19 WC 2022 | QF 2 | ‘பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’
U19 World Cup 2022 QF2 India Win Against Bangladesh
19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது காலிறுதியில் பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்தியா.
முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 111 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக அடைந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
“ அரையிறுதியில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது வரை நான்கு முறை உலக கோப்பையை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி ஐந்தாவது முறை வென்று சாதனை படைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “