U19 Women T20 WC | Team USA | ‘ஆமா இது அமெரிக்க அணியா, இந்திய அணியா?’
Team USA For U 19 Women T20 World Cup Idamporul
19 வயதிற்குட்பட்ட மகளிர் டி20 உலககோப்பைக்கான அமெரிக்க அணியை, அமெரிக்க கிரிக்கெட் போர்டு அறிவித்து இருக்கிறது. அதில் இந்திய மகளிர் பெரும்பான்மை வகிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் 19 வயதினருக்குட்பட்ட மகளிர் டி20 உலககோப்பைக்கான அணியை அறிவித்து இருக்கிறது அமெரிக்கா. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கேப்டன், துணை கேப்டன், கீப்பர் என்று அணியின் பெரும்பான்மையான மகளிர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தான்.
“ நிச்சயம் இந்தியா வெர்சஸ் அமெரிக்கா என்று ஒரு ஆட்டத்தை காண நேரிட்டால் அமர்க்களமாக தான் இருக்கும், ஆனால் யாருக்கு சப்போர்ட் செய்வது என்பதில் தான் குழம்பி விடுவோம் “