சதம் அடித்து விட்டு அதை கெத்தாக சூப்பர் ஸ்டாருக்கு அர்ப்பணித்த வெங்கடேஷ் ஐயர்!
Venkatesh Iyer Smashed 151 Runs Against Chandigarh Vijay Hazare Trophy
விஜய் ஹசாரே ட்ராபியில் மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடும் வெங்கடேஷ் ஐயர், இன்றைய சண்டிகர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து விட்டு, அதை இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு அர்ப்பணிப்பது போலவே தலைவர் ஸ்டைலில் கொண்டாடி ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
சுவாரஸ்யமான இந்த போட்டியில் முதலில் ஆடிய மத்திய பிரதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 331 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 8 போர்கள் மற்றும் 10 சிக்ஸ்சர்களுடன் 151 ரன்களைக் குவித்தார். அதற்கு பின் ஆடிய சண்டிகர் அணி இலக்கின் அருகில் வந்து (326-8) தோல்வியைத் தழுவியது.
“ ஒரு பக்கம் ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ந்து 3 சதங்கள், இன்னொரு பக்கம் அதிரடியில் விளாசும் வெங்கடேஷ் ஐயர், ஆக மொத்தம் இந்திய அணியின் எதிர்காலம் கண்களின் முன் நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறது “