சென்னை ரசிகர்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவித்த முஸ்டபிஸ்சுர் ரஹ்மான்!
Very Grateful For CSK Fans Unconditional Love Says Mustafizur Idamporul
சென்னை ரசிகர்கள் சேப்பாக்கத்தில் கொடுத்த பேராதரவுக்கு முஸ்டபிஸ்சுர் ரஹ்மான் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
நேற்று நடந்த பெங்களுரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முஸ்டபிஸ்சுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி சென்னை அணியின் அபார வெற்றிக்கு வித்திட்டார். இதனால் சென்னை ரசிகர்களிடையே முஸ்டபிஸ்சுருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் தான் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முஸ்டபிஸ்சுர் சமூக வலைதளங்களில் ஒரு பதிவினை இட்டு இருக்கிறார்.
’அணியின் வெற்றிக்காக என்னுடைய பங்களிப்பும் இருக்கும் போது மனது மிக்க மகிழ்வாக இருக்கிறது. சென்னை ரசிகர்களின் அளவு கடந்த இந்த அன்பிற்கு என்றுமே நான் கடமைப்பட்டு இருக்கிறேன்’ என்று முஸ்டபிஸ்சுர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கும் நன்றிகளுக்கு சென்னை ரசிகர்கள் பலரும் தங்கள் இசைவுகளை தெரிவித்து வருகின்றனர்.
” பொதுவாகவே வங்கதேச ரசிகர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் ஆகவே ஆகாது, ஆனால் ஐபிஎல் அவர்களை இணைந்து கிரிக்கெட்டை கொண்டாட வைத்து இருக்கிறது “