விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!
இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து எதிரணியினரை நிலைகுலைய வைத்து இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக்கான்.
விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியில் கர்நாடகா அணியை, தமிழக அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி எட்டு விக்கெட் இழப்பிற்கு 354 ரன்களைக் குவித்தது. தமிழக அணி சார்பில் ஜகதீசன் 102(101), சாய் கிஷோர் 61(71) மற்றும் ஷாருக்கான் 79(39) ரன்களைக் குவித்தனர்.
அதற்கு பின் விளையாடி வரும் கர்நாடகா அணி தற்போது வரை 30 ஓவர்களுக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து ஐந்து முக்கியமான விக்கெட்டுக்களையும் இழந்து திணறி வருகிறது. ஆகவே விஜய் சங்கர் தலைமையிலான பலமான தமிழக அணி கிட்ட தட்ட அரையிறுதியை நெருங்கி விட்டது என்றே கணித்துக் கொள்ளலாம்.
இதில் ஷாருக்கான் விளையாடிய விதம் தமிழக ரசிகர்களை மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கும் நமது முன்னாள் கேப்டன் தோனியை நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் பிரான்சசிஸ் இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கும். இந்த முறை நிறைய தமிழக வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு முன்நிறுத்தப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம்.
“ தோனியின் சாயலில் அதிரடி காட்டி வரும் தமிழக வீரர் ஷாருக்கான், நாளை இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்புவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “