டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் கோஹ்லியின் இடம் கேள்விக்குறி?
வருகின்ற டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் ஹோஹ்லியின் இடம் கேள்விக்குறி தான் என்பதொரு தகவல் கசிந்து வருகிறது.
வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லியின் பெயர் இருப்பது சந்தேகம் தான் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஓரங்கட்டப்படுவதற்கு இரண்டு காரணங்கள் பொதுவாக கூறப்படுகிறது. உலககோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. இரண்டு களங்களுமே ஸ்லோ பிட்ச் வகையை சேர்ந்தது என்பதால் விராட் கோஹ்லியின் ஆட்டத்திற்கு ஏதுவாக இருக்காது என்று கூறப்படுகிறது.
இன்னொன்று அதிரடியான இளைஞர்கள் பலர் தற்போது அணியில் தென்படுவதால் அவர்களுக்கு வழிவிடும் வகையில் விராட் கோஹ்லியை டி20 உலககோப்பையில் இருந்து பிசிசிஐ ஓரங்கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு சீனியரை மட்டும் அணியை வழிநடத்த தெரிந்தெடுத்து விட்டு, மீதி அனைத்து வீரர்களையும் இளம் வீரர்களாக உலக கோப்பை ஸ்குவாடில் இணைக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்து இருக்கிறதாம்.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு என பிசிசிஐ முடிவெடுத்து இருப்பது என்னவோ சரி தான், ஆனாலும் கூட ஒரு அழுத்தமான போட்டிகளை ஒரு சமநிலையான அணியால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அப்படிப்பட்ட சமநிலையான அணிக்கு விராட் போன்ற சீனியர் வீரர்கள் நிச்சயம் அவசியம். 7 இளம் வீரர்கள் ஒரு அணியில் இருக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் 4 சீனியர் வீரர்களும் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கால் இறுதி, அரையிறுதி போன்ற போட்டிகளில் இருக்கும் அழுத்தம் என்பது அணிக்குள் பகிரப்பட்டு சமநிலைக்கு கொண்டு செல்லப்படும். அந்த சமநிலை வெற்றிக்கான அழியை நிச்சயம் வழி வகுக்கும்.
“ அதுவே சீனியர் வீரர்கள் இல்லையெனில் ஒட்டு மொத்த அழுத்தமும் இளம் வீரர்களின் மீது இருக்கும். அதனால் அவர்களின் ஆட்டமும் பாதிக்கும். அணியின் வெற்றியும் பாதிக்கும். ஒன்றிரண்டு அதிரடியான போட்டிகளை காண முடியுமே தவிர, கோப்பையை கையில் எடுப்பது என்பது சந்தேகம் தான் “