விராட் கோலியை அவமதித்து ரோஹிட் சர்மாவிற்கு வழங்கப்பட்டு இருக்கிறதா தலைமைப் பொறுப்பு?
சமீபத்தில் பிசிசிஐ, விராட் கோலியை ஒரு நாள் போட்டிக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ரோஹிட் சர்மாவை நியமித்து இருந்தது. சிறிதளவு நன்றி பயனோ அல்லது முறையான அறிக்கையோ இன்றி கோலியை அவமதித்து ரோஹிட்டுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
ஏற்கனவே டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து விராட் விலகும் போது, பிசிசிஐ கூட்டமைப்பினர் தற்போதைக்கு விலக வேண்டாம் என்று தடுத்ததாகவும், அவ்வளவு தடுத்த போதும் விராட் விலகியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே லிமிட்டடு ஓவர் கிரிக்கெட்டுகளில் இரண்டு தலைமை என்ற நிலை உருவானது. இந்த இரட்டைத் தலைமையை ஒற்றைத்தலைமை ஆக்கும் நோக்கிலேயே ரோஹிட் சர்மா டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தனது சார்பில் அறிக்கை விடுத்து இருக்கிறது.
பிசிசிஐ இது குறித்து விராட்டிடம் பேசிய போது 48 மணி நேரம் அவகாசம் கேட்டு இருக்கிறார் விராட். ஆனால் அதையும் மறுத்து ஒரே ஒரு ட்வீட்டில் தலைமையை மாற்றி இருக்கிறது இந்த பிசிசிஐ கூட்டமைப்பு. இது நிச்சயம் ஒருவரை அவமதித்து இன்னொருவருக்கு அந்த அவமதிப்பில் சூட்டப்பட்ட கீரிடம் என்பதே ஆகும்.
“ கிட்ட தட்ட கேப்டனாக 70 சதவிகிதம் வெற்றிகள், கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக 72 சராசரி என்ற சாதனையை தன்வசம் வைத்து இருக்கும் ஒரு பெருமைக்குரிய தலைமையை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறது இந்த பிசிசிஐ, இதிலிருந்து எளிதில் மீண்டு வாருங்கள் விராட் “