கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி?
ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விரைவில் விராட் கோலி விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பணிச்சுமையின் காரணமாகவும், தனது பேட்டிங் திறனில் முழுமையாக கான்சன்ட்ரேட் பண்ண இயலாத சூழலும் இருப்பதால், இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு பிறகு ரோஹிட் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இதுவரை 95 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டன் பதவி வகித்த விராட் கோலி, அதில் 65 போட்டிகளில் வென்று 70.43% என்ற வெற்றி சதவிகிதத்தை தன்வசம் கொண்டுள்ளார். மேலும் 45 டி20 போட்டிகளுக்கு தலைமைப் பண்பு வகித்த விராட் கோலி அதில் 27 போட்டிகளில் வென்று 65.11% என்ற வெற்றி சதவிகிதத்தை தன் வசம் கொண்டுள்ளார்.
” சில நாள்களாகவே பேட்டிங்கில் பெரிதளவில் ஜொலிக்காத விராட் கோலி, விரைவில் தனது 71-ஆவது சதத்தை நிறைவு செய்து, தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இனி ஒரு பேட்ஸ்மேனாக நிறைவு செய்வார். பொறுத்திருந்து பார்க்கலாம் ”