டி20 போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் விராட் கோலி!
Virat Kohi Officially Step Down From T20 Captaincy
சில நாட்களாகவே இணையத்திலும், பத்திரிக்கை செய்திகளிலும் விராட் கோலி ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன. பிசிசிஐ அதை மறுத்து வந்தாலும் தற்போது விராட் தனது சார்பிலிருந்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் பணிச்சுமை காரணமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டும், தான் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது போக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக அவரே தொடரப் போவதாகவும் அறிக்கையில் கூறி உள்ளார். கடந்த ஒரு வாரமாக பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் தனது ஒரு அறிக்கையில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.
“ இனி விராட் கோலியின் பேட்டிங்கில் ஒரு தீப்பொறி இருக்கும் என்றும் களத்தில் முந்தைய விராட்டைக் காண காத்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையை விராட் இனி பூர்த்தி செய்வார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விராட் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.