ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகும் விராட் கோலி!
Virat Kohli Step Down From RCB Captaincy After This IPL
ஆர்சிபி அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
ஏற்கனவே இந்திய அணியில் டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து, வரும் டி20 உலக கோப்பைக்கு பிறகு விலக இருப்பதாக அறிவித்து இருந்த விராட் கோலி, தற்போது ஆர்சிபி அணியின் தலைமைப்பொறுப்பில் இருந்தும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஐபிஎல்லே தனது கடைசி ஐபிஎல் கேப்டன்சிப் என்றும், இருந்தாலும் வருங்காலத்திலும் ஆர்சிபி அணிக்கே ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக விளையாட இருப்பதாகவும் கோலி அறிவித்துள்ளார்.
“ பணிச்சுமை காரணமாகவே தான் டி20 தலைமைப் பண்பில் இருந்து விலகி இருப்பதாகவும், இனி ஒரு பேட்ஸ்மேனாக தனது கடமையை தொடர்ந்து செய்வேன் என்று விராட் கோலி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார் “