டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகினார் விராட் கோலி!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. திடீரென்று அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
“ இதன் மூலம் அனைத்து தரப்பட்ட போட்டிகளுக்கும் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார் விராட் கோலி, இனி பழைய கிளாசிக் விராட்டை பார்க்க முடியுமா என்பதை பொறுத்து இருந்து காணலாம் “