சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார் விராட் கோஹ்லி!
Virat Kohli Wants To Retire From International T20
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி முழுமையாக ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீப காலமாகவே விராட் கோஹ்லியின் பார்ம் என்பது நிலையாக இல்லை. விராட் மீதான ரசிகர்களின் நம்பிக்கையும் தற்போதெல்லாம் பெரிதாக இல்லை. அவரே அவரின் நிலையை உணர்ந்து கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விலகி ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.
“ இது விலகலா இல்லை முழுமையான ஓய்வா என்பது அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தால் மட்டுமே புலப்படும் “