பெங்களுரு அணிக்காக மட்டுமே கடைசி வரை விளையாடுவேன் – விராட் கோலி
கிரிக்கெட் விளையாடும் வரை, கேப்டனாக இல்லாவிட்டாலும் ஒரு ப்ளேயராக பெங்களுரு அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று கோலி கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டரில் கொல்கத்தாவுடன் தோற்றதற்கு பின் பேசிய பெங்களுரு அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்கள் விளையாடுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளேன். 120 சதவிகிதம் என் உழைப்பையும் அணிக்கு கொடுத்துள்ளேன். என்னுடைய கடைசி விளையாட்டும் பெங்களுரு அணிக்காகத் தான் இருக்கும் என்று உருக்கமாக கூறி உள்ளார்.
” இதுவே கோலியை ஐபிஎல்லில் கடைசியாக கேப்டனாக பார்த்த தருணம், கோப்பை இல்லையெனினும் அவரின் உழைப்பும் விடா முயற்சியும் இருந்திருக்கிறது. ஒரு வீரனாய் தோல்வியையும் ஏற்று தானே ஆக வேண்டும். ரசிகர்களாகிய நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். போ… உலக கோப்பைக்கு தயாராகு வீரனே…”